விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் டெல்லி பிரிவுத் தலைவர் சுரேந்திர குமார் குப்தா, சர்ச்சைக்குரிய காமெடி நடிகர் முனாவர் ஃபரூக்கியின் ‘டோங்ரி டு நோவேர்’ நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்த நபர் தனது நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களையும் தெய்வங்களையும் தொடர்ச்சியாக கேலி செய்து வருகிறார். இதனால், பாக்யா நகரில் வகுப்புவாத பதற்றங்கள் ஏற்பட்டது. எனவே, இந்நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இந்நிகழ்ச்சியை எதிர்த்து போராட்டங்களை நடத்துவார்கள்” என தெரிவித்துள்ளார். டெல்லியின் சிவிக் சென்டரில் உள்ள கேதார்நாத் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது. சர்ச்சைக்குரிய முஸ்லிம் நபரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான முனாவர் ஃபரூக்கி, ஹிந்து கடவுள்கள்களை திட்டமிட்டு இழிவு செய்து வருகிறார். அவரது ஹிந்து வெறுப்பு பிரச்சாரம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான கடந்தகால அநாகரீகமான கருத்துக்களால் அவரது ‘டோங்ரி டு நோவர்’ நிகழ்ச்சியின் பல நேரடி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.