எஃகு துறையில் பாரதத்தின் வளர்ச்சி

எஃகு உற்பத்தி தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பாரத கனிமங்கள் மற்றும் உலோக தொழில் குறித்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசுகையில், “பாரதம் அனைத்து துறைகளிலும் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வகையில் பாரதம் தற்போது எஃகு உற்பத்தியில் உலகின் 2வது இடத்தில் உள்ளது. இத்துறையில், பாரதம் வெகு விரைவாக முன்னேறி முதலிடத்தை பிடித்து விடும். தற்போது சீனா முதலிடத்தில் இருந்தாலும் அதனை தாண்டி நாம் முதல் இடத்தை அடைவதற்கு வெகு தூரம் இல்லை. எஃகுக்கு நிகர இறக்குமதி செய்யும் நாடாக இருந்த பாரதம் தற்போது உருக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டில் பாரதத்தின் தனிநபர் எஃகு நுகர்வு 57.8 கிலோவிலிருந்து தற்போது 78 கிலோவாக அதிகரித்துள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி இலக்கை அடைய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பாரதம் ஒரு எஃகு உற்பத்தி சக்தியாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதற்கான கொள்கை வகுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எஃகு துறையில் பாரதம் விரைவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாறும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.