ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த விவசாயிகள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து, தலைநகர் டெல்லி மற்றும் சிங்கு எல்லையில் டெல்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) மற்றும் பல்வேறு விவசாயிகள் குழுக்கள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் மகாபஞ்சாயத்தை நடத்த திட்டமிட்டுள்ளன.
அவர்களின் பிரச்சினைகளின் பட்டியலில் ‘வேலையின்மை’ என்ற விஷயம்கூட சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒன்றே போதும், இவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல, போராட்டம் நடத்துவதற்காக காரணத்தைத் தேடி அலையும் தொழில்முறை போராட்டக்காரர்கள் என்பதை நிரூபிக்க என மக்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, இந்த போராட்டக் குழுக்கள் ஒன்று கூடுவதால், டெல்லி முழுவதும் போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடும் எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். டெல்லி முழுவதும், பெரும்பாலான எல்லைகளில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு எல்லையிலும் கூடுதல் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தரில் விவசாயிகள் ஒன்று கூட வேண்டாம் என்று வலியுறுத்துவதாக சட்டம், ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் தேபேந்திர பதக் கூறியுள்ளார். டெல்லி மெட்ரோவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
2020ன் பிற்பகுதியில், இதே விவசாய அமைப்புகளும் சக்திவாய்ந்த ஜாட், சீக்கிய அமைப்புகளும் பஞ்சாபில் விவசாயத்தின் மீதான தங்கள் பிடியை தக்கவைத்துக் கொள்வதற்காக மூன்று விவசாய சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக தேசத்தையே சீர்குலைக்கும் கடுமையான போராட்டங்களைத் தொடங்கினர்.
அரசு கொண்டுவர முற்பட்ட இந்த சீர்திருத்தங்கள் பல தசாப்தங்களாக சாதாரண விவசாயிகளை சுரண்டும் ஏகபோகம், லாபிகள், நிலப் பிரபுத்துவ மேலாதிக்கங்களின் பிடியில் இருந்து அவர்களை விடுவித்திருக்கும். சாதாரண விவசாயிகளும் மத்திய அரசின் சட்டத்தை ஆதரித்தனர். விவசாய நிபுணர்களின் ஆதரவும் இதற்கு இருந்தது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயேச்சைக் குழு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளில் 86 சதவீத்தினர் இந்த சீர்திருத்தங்களை ஆதரிப்பதாகக் கண்டறிந்தது.
2020ல் நடத்தப்பட்ட இந்த போராட்டங்கள் டெல்லியின் எல்லைகளிலும், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் பரவின. இவர்களால் அப்பகுதி மக்களுக்கு 1 வருடமாக ஏற்பட்ட வேதனைக்கு அளவில்லை. இந்த போராட்டங்களில் தீவிர இடதுசாரிக் குழுக்கள் காலிஸ்தானி பிரிவினைவாதிகள், வெளிநாட்டு சக்திகள் போன்றவை இணைந்தன. வழக்கம்போல காங்கிரஸ், தி.மு.க, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இதனை அனைத்து விதத்திலும் ஆதரித்தன.
நன்கு கட்டமைக்கப்பட்ட, தாராளமாக நிதியளிக்கப்பட்ட இந்த வன்முறையாளர்கள், குடியரசு தினத்தன்று டெல்லியில் பயங்கரமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இவர்களின் போராட்டத் தளங்களில் கற்பழிப்புகள், கொலை, கொள்ளை போன்ற கடுமையான குற்றங்கள் அரங்கேறின. இதனால், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலம் மேலும் சீர்குலைந்துவிடும் என்ற அச்சத்தில், மிகவும் தேவையான விவசாய சீர்திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இப்போது, அதே நடிகர்கள் புதிய கோரிக்கைகளுடன் மீண்டும் வந்துள்ளனர். மீண்டும் இந்த குண்டர் கும்பலுக்கு அரசு அடிபணியுமா?