குழந்தைகளை பட்டினி போட்ட பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கிளாக்காடு கிராமத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பயில உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அருகில் உள்ள வேங்கோடு, கூடாரம், வில்வெற்றி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராமங்களை சேர்ந்த 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு சமீபத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மிகக்குறைவான அளவே பரிமாறப்பட்டுள்ளது. இதனால், உணவு கிடைக்காமல் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பசியால் வாடினர். சில மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர்.  இதையடுத்து, பள்ளிக்கு வந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை சமாதானப்படுத்தி, அதன்பின்னர், உணவு தயாரித்து மாலை 4 மணிக்கு மாணவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.