முஸ்லிம்களுக்கு தீமை செய்யும் முஸ்லிம் அமைப்புகள்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், அச்சம் நிறைந்த ஆட்சியை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து முஸ்லிம் அமைப்புகள் மௌனம் சாதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது என்று இந்திய முஸ்லிம்கள் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு (ஐ.எம்.எஸ்.டி) கேள்வி எழுப்பியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ இந்த மௌனம்தான் முஸ்லிம் மத வெறுப்பாளர்களுக்கு மதத்தை வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் மதமாக சித்தரிக்கத் தூண்டுகிறது. இத்தகைய முஸ்லிம் அமைப்புகளின் செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம் செய்யும். தாங்கள் தாக்கப்படும்போது மட்டுமே மனித உரிமைகளை நினைவு கூர்வது முஸ்லிம் அமைப்புகளின் தரப்பில் அதிகமாக பின்பற்றப்படுகிறது. ஆனால் மத விஷயங்களில் தங்களிடமிருந்து வேறுபடும் முஸ்லிம்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு அதே உரிமைகளையும் கண்ணியத்தையும் அவை வழங்குவதில்லை. இது மிகத்தெளிவாக, முஸ்லீம் பிரச்சினைக்கு உதவாத பாசாங்குத்தனம். ருஷ்டி மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அவர்கள் கண்டிக்க வேண்டும். முஸ்லிம் அமைப்புகள் அவதூறுகள் பற்றிய தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.  இந்த அறிக்கையை சமூக ஆர்வலர் மேதா பட்கர், ஆர்வலர், பிசிபாலஜிஸ்ட் மற்றும் அரசியல்வாதி யோகேந்திர யாதவ் மற்றும் சந்தீப் பாண்டே உட்பட 60 பிரபல குடிமக்களும் ஆமோதித்துள்ளனர். ஐ.எம்.எஸ்.டி இணையதளத்தின்படி, இது ஐ.நா.வின் மனித உரிமைகள் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு ஏற்ப செயல்படும் இந்திய முஸ்லிம்களின் மன்றமாகும்.