டெல்லி கலால் கொள்கை, மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் நடத்தப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள் சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் கமிஷனர் அரவா கோபி கிருஷ்ணா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள், மின்னனு சாதனங்கள், வங்கி பரிமாற்றங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அந்த பணி முடிந்ததும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 13 பேர், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் விதமாக அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.