பாரதம் தாய்லாந்து 9வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்காக பாங்காக் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாங்காக்கில் உள்ள பாரத சமூகத்தினரிடம் உரையாற்றினார். அப்போது அவர், “உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் நியாயமற்ற முறையில் அதிகமாக உயர்வடைந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியில் பாரதத்தின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஊட்பட பல நாடுகள் அறிந்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் பாரதம் தனது நலன்களைப் பற்றியே சிந்திக்கும். இதில், பாரதம் சிறந்த ஒப்பந்தங்களை விரும்புகிறது. ரஷ்யா உக்ரைன் போர் குறித்து நாங்கள் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உள்ளோம். எனக்கென்று ஒரு நாடு இருக்கிறது. குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மக்கள் அதிகமாக செலவழித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை வாங்க முடியாது. அதற்காக குறைந்த விலையில் எரிசக்தி பொருட்களை வாங்க சிறந்த ஒப்பந்தத்தை உறுதி செய்வது எனது தார்மீக கடமை” என தெரிவித்துள்ளார். முன்னதாக, 9வது இந்தியா தாய்லாந்து கூட்டு ஆணையக் கூட்டத்தில், ரஷ்யாவில் இருந்து பாரதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது சிறந்த ஒப்பந்தம், இந்த முடிவு சரியானதே என ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.