தன் தந்தை கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அமைதி ஊர்வலம், மாரத்தான் போன்றவற்றை நடத்தினார் என நாம் அறிவோம். ஆனால், தேசத்திற்காக, வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும், தேசப்பற்றை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியங்களுக்காக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அசாமின் கௌஹாத்தி நகரில் இன்று ஹர்கர் திரங்கா (வீடுகள்தோறும் தேசியக்கொடி) பேரணி நேற்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தேசிய கொடிகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். இதுபற்றி அசாம் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கௌஹாத்தி நகரில் இன்று காலையில் நடைபயிற்சியின்போது, தேசிய கொடிகளை ஏந்தி சென்றுள்ளோம். நாங்கள் அனைவரும் அதில் பங்கு பெற்றுள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றும்படி அசாம் மக்களை கேட்டு கொள்கிறேன்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.