லாக்கப் மரணம்

கடந்த ஆண்டு திருணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேற்கு வங்க காவல்துறை மம்தா பானர்ஜியின் அடிவருடிகளாக செயல்பட்டு வருகிறது உலகறிந்த உண்மை. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை மமதா பானர்ஜியின் காவலர்கள் குறிவைப்பது வழக்கமாகிவிட்டது. இதனால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் கோல்ஃப் கிரீனில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் திபாங்கரின் சகோதரர் ரஜீப் சாஹா என்பவரை, அமிதாவா தமாம் என்ற துணை கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் விசாரிக்க வேண்டும் என கூறியதாக, தைமூர் அலி என்ற காவலரும் அக்தர் அலி என்ற குடிமைத் தன்னார்வலரும் வலுக்கட்டயமாக காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் அதற்கான வாரண்ட் எதுவுமில்லை. மேலும், ரஜீப் சாஹா அப்போதுதான் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தார் என அவரது தாயார் சொல்லியும் கேட்காமல் அழைத்துச் சென்றனர். மதியம் அழைத்துச் செல்லப்பட்ட ரஜீப் சாஹா, இரவில் வீடு திரும்பினார். அவர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். இதனால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கொல்கத்தா துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் தீபங்கரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும் அதற்கு அவரது சகோதரர் பலியாகிவிட்டார் என்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ.க தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.