உத்தரப் பிரதேசம் ஜான்பூரில் சமீபத்தில் நடந்த முகரம் பண்டிகையின் போது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’, ‘சர் தான் சே ஜூடா’ (பாகிஸ்தான் வாழ்க மற்றும் தலையை துண்டிப்போம்) போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஜான்பூர் நகர காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இத்தகைய மத வெறுப்பு, பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பியதற்காக முகமது ஷகீல், அப்துல் ஜப்பார், முகமது ஜீஷன் மற்றும் முகமது கரிஷ் ஆகிய நால்வர் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்கிறது.