உத்தரப் பிரதேசம் பரேலி மற்றும் வாரணாசி மாவட்டங்களில் முகரம் பண்டிகை ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் கல்வீசித் தாக்கினர், கடைகளை சேதப்படுத்தினர். இதனால், அங்கு வன்முறை மோதல்கள் வெடித்தது. இதனால் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அதில் முகரம் ஊர்வலத்தின் போது செங்கல் மற்றும் கற்களைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குவது தெளிவாக தெரிகிறது. குறிப்பிட்த்தக்க விதத்தில் சில மூஸ்லிம் பெண்களும் இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.