டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றம் (ஃபேன்ஸ்) ஏற்பாடு செய்துள்ள சைபர் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரகரும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மற்றும் ஃபேன்ஸ் அமைப்பின் புரவலருமான இந்திரேஷ் குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். தைவான், பாரதம் மற்றும் பிற அண்டை நாடுகளை நோக்கிய சீனாவின் நகர்வுகள், அதன் விரிவாக்கக் கொள்கைகளால் பாரதம் தற்போது சீனாவிடமிருந்து கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. நமது இணைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘ரிங் ஆஃப் ஃபயர்’ ஒன்றை உருவாக்க வேண்டும். சீனாவின் இத்தகைய தீய நோக்கங்களை நாம் இப்போதே முறியடிக்கத் தவறினால், சீனாவில் முதல் இலக்குகளான தைவான் மற்றும் நேபாளத்திற்குப் பிறகு அதன் அடுத்த இலக்கு பாரதமாகத்தான் இருக்கும். தற்கால போர் முறைகள் வேகமாக மாறி வருகின்றன. அயன் இண்டர்நெட் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையக் குற்றங்களை நாம் கையாளும் போது, ஒவ்வொரு தகவல்களும் மிகவும் அவசியமானவை. தனது பிரச்சாரப் போரைத் தவிர, பாரதத்துக்கு எதிரான பொருளாதார மற்றும் இணையப் போரிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசின் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் நகர்வுகள் தடுக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், தொலைத்தொடர்பு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் இருந்து சீனா வெளியேற்றப்பட்டது. எனினும், சீனா நடத்திவரும் பாரதத்துக்கு எதிரான இணையவழி போரையும் நாம் தோற்கடிக்க வேண்டும்” என கூறினார்.
இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரான மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், “பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் போலியான செய்திகளை பரப்புவதன் மூலம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சமூக கட்டமைப்பை சீர்குலைக்க சமீப காலங்களில் பல முயற்சிகள் நடந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மத்திய அரசு பல்வேறு உத்திகள் மற்றும் கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. பாரதத்தை தன்னிறைவு அடையச் செய்வதற்கும், சர்வதேச அரங்கில் பாரதம் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கவை. நமது நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, தனது குடிமக்களின் நலனுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரான எதையும் பாரதம் பொறுத்துக் கொள்ளாது என்ற வலுவான செய்தியை எதிரிகளுக்கு நாம் அனுப்பியுள்ளோம். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் பாரதம் சரியான பாதையில் பயணிக்கிறது. நம் நாட்டினர் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று என்னால் உறுதியாக்கூற முடியும். நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் தொழில்நுட்ப பொருட்கள், தளவாடங்களால் சைபர்ஸ்பேஸில் உள்ள அதிகப்படியான சவால்கள் மற்றும் மீறல்களைக் கையாளும் நிலையில் இருக்கிறோம். இதற்காக, பிரதமர் மோடி, தற்சார்பு பாரதம் என்ற முன்முயற்சியை எடுத்துள்ளார். இது நாம் மற்ற நாடுகளைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும். நமது இணையச் சூழலுக்கு ஏற்ற அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு தேவை. சைபர்ஸ்பேஸ் என்பது செயல்பாடு மற்றும் இடத்தின் தனித்துவமான கலவையாகும். இதற்கு பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. கூட்டுக் கட்டளையை உருவாக்குவதே காலத்தின் தேவை. சைபர் டொமைனில் இது தியேட்டர் மற்றும் ஃபங்ஷன் கமாண்ட் ஆகியவற்றின் கலவையாகும். இதற்காக பாரத ராணுவத்தின் முன்னாள் ராணுவ தளபதி, மறைந்த ஜெனரல் பிபின் ராவத், கூட்டு ‘தியேட்டர் கமாண்ட்’ அமைக்கும் பணியில் ஈடுபட்டார்” என தெரிவித்தார்.