நாம் இருவர் நமக்கு 12 குழந்தைகள்

திரைப்பட இயக்குனர் கமல் சந்திரா ‘ஹம் தோ ஹமாரே பாரே’ (நாம் இருவர் நமக்கு 12 குழந்தைகள்) என்ற திரைப்பட தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். சமூக நாடகத்தில் தேசிய விருது பெற்ற அன்னு கபூர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், மனோஜ் ஜோஷி, அஸ்வினி கல்சேகர் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட அறிவிப்பு முஸ்லிம்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்த பட போஸ்டரில், அன்னு கபூர் 11 குழந்தைகளைக் கொண்ட ஒரு முஸ்லீம் குடும்பத்தின் தலைவராகவும், அவரது கர்ப்பிணி மனைவி அவருடன் நிற்கும் வகையில் உள்ளது. மேலும், படத்தின் டேக்லைனாக ‘ஜல்தி ஹி சீன் கோ பிச்சே சோட் டெங்கே (நாங்கள் விரைவில் சீனாவை முந்துவோம்)’  என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போஸ்டர் வெளியான உடனேயே, ‘பத்திரிகையாளர். ராணா அய்யூப் வழக்கம்போல, இது ‘இஸ்லாமிய வெறுப்பு’ என்று கண்டித்தார். தனது டுவிட்டர் பதிவில், “மக்கள்தொகை பெருக்கத்திற்கு முஸ்லிம்களை காரணம் காட்டி, சமூகத்தின் மீதான இடைவிடாத தாக்குதலை நீட்டிக்கும் இதுபோன்ற படத்தை தணிக்கை வாரியம் எப்படி அனுமதிக்கிறது? ஒரு முஸ்லிம் குடும்பத்தின் படத்தைப் பயன்படுத்தி அதை ‘ஹம் தோ ஹமாரே பரா’ என்று அழைப்பது வெட்கக்கேடானது. இந்த படத்தை விளம்பரப்படுத்தியவர் சங்கி.  இது மதவெறித் திரைப்படம்” என கூறியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது திரையரங்குகளுக்கு வந்தவுடன் மேலும் சர்ச்சையைக் கிளப்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.