கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி விஸ்வ சம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பில் ஸ்ரீ நாரத ஜெயந்தி விழா திருச்சியில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் கோட்டத் தலைவர் கிருஷ்ண முத்துசாமி தலைமை வகித்தார். முனைவர் ஓய்வு பெற்ற நூலகர் மற்றும் ஓலைச்சுவடி காப்பாளர் (தஞ்சை சரஸ்வதி மஹால்) பி.பெருமாள் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் தென்பாரத மக்கள் தொடர்பாளர் பா.பிரகாஷ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் தென்காசி கணேசன், ராக்போர்ட் டைம்ஸ் ஆசிரியரும் வெளியீட்டாளருமான எஸ்.ஆர். லக்ஷ்மிநாராயணன் ஆகியோருக்கு “நாரதர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் கே.கே. சாமி எழுதிய ‘அதிசயமே அதிசயிக்கும் ஆர்.எஸ்.எஸ்’ என்ற ஆடியோ புத்தகமும், வழக்குரைஞர் கேசவன் எழுதிய ‘ஹிந்து கோயில்கள் அமைப்பு முறை மற்றும் பாதுகாப்பு சாதனம்’ ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
விழாவில் தென்தமிழக ஆர்.எஸ்.எஸ் இணைச் செயலாளர் மணி, மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் மோகன், நகரத் தலைவர் ரஜினிகாந்த், ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரகர் ஸ்ரீகணேசன், பாரதிய கிசான் சங்க மாநில அமைப்பாளர் சி.எஸ்.குமார், கோ சேவா மாநில அமைப்பாளர் கோவிந்தராஜன், விஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் மாநில அமைப்பாளர் ராம்நாத் உட்பட பத்திரிகையாளர்களும் சமுக ஊடகத்தினரும் கலந்துகொண்டனர்.
தகவல் : வி.எஸ்.கே. தென் தமிழகம்