போலி கணக்குகளை தொடங்க அரசு உத்தரவு

ராஜஸ்தான்அரசு, அம்மாநில அரசின் சாதனைகளை சமூக உடகங்களில் பிரபலப்படுத்தவும் அதில் இளைஞர்களை ஈடுபடுத்தவும் ராஜீவ்காந்தி யுவமித்ரா இன்டர்ன்ஷிப் என்ற திட்டத்தைத்தொடங்கியது. கட்சியினர் உட்படசுமார் 50,000 யுவமித்ரா தொண்டர்களை இதில் காங்கிரஸ் அரசு ஈடுபடுத்தியுள்ளது. அவர்கள் சமூகஊடகங்களில் அரசின் திட்டங்களைப் பற்றி தெரிவிப்பார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், சவாய்மாதோபூரில் உள்ள பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் அலுவலகத்தின் உதவி இயக்கு நர்சதீஷ்சஹாரியா,  சர்ச்சைக்குரிய அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ‘பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களின் கீழ் உள்ள யுவமித்ரா தன்னார்வலர்களிடம் அவர்களின் அசல் சமூகஊடகக் கணக்குகளைத் தவிர்த்து, டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்கவும் அவர்களின் அசல் சமூகஊடகக் கணக்குகளைத் தவிர்த்து, போலி கணக்குகளை தீவிரமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும். ஒருவர் 10 போலி டுவிட்டர் கணக்குகளைத் திறக்க ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம். அந்த கணக்குகளில் ‘யுவமித்ரா’என்ற வார்த்தை இருக்கக்கூடாது. அவர்கள் அந்த போலி கணக்குகளிலிருந்து ராஜஸ்தான் மாநில அரசின் நலத்திட்டங்களை பரப்ப வேண்டும். தரப்படும் செய்தி உள்ளடக்கத்தை ட்வீட், மறுட்வீட் செய்ய வேண்டும். அவர்கள் தங்களது சொந்த சமூகஊடகக் கணக்குகளை இதற்கு பயன்படுத்தக்கூடாது’என்று கூறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து குழுக்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டது. இது சமூகஊடகங்களில் வைரலாக பரவியது. மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திரசிங்ஷெகாவத் உட்பட பலர் அந்த அதிகாரியின் உத்தரவையும் ராஜஸ்தான் அரசையும் கடுமையாக அவர்கள் சாடினர்.  ‘ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு தன் சுயநலத்திற்காக இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் சிக்கவைக்கிறது’என்று கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார். இதையடுத்து அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது சஸ்பெண்ட் உத்தரவில் அந்த அறிவிப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.