பாரதத்தின் டிஜிட்டல் பலம்

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், கம்போடியாவில் பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “பாரதத்துக்கு டிஜிட்டல் நிதி, டிஜிட்டல் உள்ளடக்கம் உள்ளிட்ட சில பலங்கள் உள்ளன. டிஜிட்டல் அடையாளம் மற்றும் டிஜிட்டல் கட்டண பணப் பரிவர்த்தனை முறைகள் மூலம் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. சிங்கப்பூரிலும் அந்த அமைப்புகளும் உள்ளன. ஆனால் தென்கிழக்கு ஆசியாவின் மற்ற பகுதிகளுடன் எங்கள் கட்டண முறைகளை எவ்வாறு இணைக்கலாம் என்பதை ஆராய்வதற்காக பாரதம் எங்களுக்கு ஒரு தெளிவான பாதையை அமைத்து தந்துள்ளது.  ‘ஆசியான் இந்தியா’ வர்த்தகத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்து வருகிறோம். இதன்மூலம், இந்திய துணைக் கண்டத்திற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையே சரக்குகளின் இயக்கத்திற்கான கட்டுப்பாடுகளை குறைப்பது, சுங்க அனுமதியை எளிதாக்குதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் ஆகியன சாத்தியமாகும்” என்று கூறினார்.