இது ஆரம்பம் மட்டும்தான்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “சுதந்திரத்தின் 75வது ஆண்டில், பாரதம் ஸ்டார்ட் அப்களின் வீடாக உள்ளது. தற்போது பாரதத்தில் 75,000 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இதன் மூலம் 7.46 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆரம்பம் மட்டும்தான். துவக்கத்தில் 808 நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட 10,000 ஸ்டார்ட் அப்களுடன் ஒப்பிடும்போது, சமீபத்திய 156 நாட்களில் 10,000 ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வரும் ஸ்டார்ட் அப்களில் 49 சதவீதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களில் 12 சதவீதம் ஐ.டி சேவையை வழங்கும் நிறுவனங்களாகவும், 9 சதவீதம் ஹெல்தேர் & லைஃப் சயின்ஸ் துறையை சேர்ந்ததாகவும், 5 சதவீதம் வணிக சேவையையும், 5 சதவீதம் விவசாயத்தையும் சார்ந்துள்ளன. கடந்த ஆண்டில் இத்துறையில் வேலைவாய்ப்பு 110 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் போது நாட்டில் புதுமை மற்றும் ஸ்டார்ட் அப்களை வலுப்படுத்த தேவையான சுற்றுசூழல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அப்படியொரு வெற்றிகரமான சூழல் உருவாகியுள்ளது. இனி வரும் காலங்களிலும் பாரதத்தில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.