டெல்லியில் அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் (ஏ.ஐ.எஸ்.எஸ்.சி) சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த சர்வமத நல்லிணக்கக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில், ‘பி.எப்.ஐ மதத் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தானில் சமீபத்தில் கன்னையா லால் கொல்லப்பட்டது, பீகார் பயங்கரவாத தொகுதி போன்ற சம்பவங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சம்பந்தப்பட்ட நபர்களின் கைவரிசை உள்ளது. தேசவிரோத நடவடிக்கைகளிலும் பி.எப்.ஐ நபர்கள் ஈடுபட்டுள்ள சம்பவங்கள் வெளியாகியுள்ளது. எனவே பி.எப்.ஐ என்ற முஸ்லிம் அடிப்பாடைவாத அமைப்பின் செயல்பாட்டைத் தடை செய்ய வேண்டும்’ என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், இந்த ஏ.ஐ.எஸ்.எஸ்.சி அமைப்பில் உள்ள லக்னோவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான சல்மான் நத்வி இந்த தீர்மானத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் எதிர்த்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ஒரு சில உறுப்பினர்களின் தவறு காரணமாக முழு அமைப்பையும் தடை செய்வது நியாயமற்றது என்று கூறினார். மேலும் அவர், அந்த அமைப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் ஒப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சமுதாயத்திற்காக செயல்படுவதை போலவே, பி.எஃப்.ஐ.யும் செயல்படுகிறது’ என வாதிட்டுள்ளார். இந்த ஒப்பீட்டுக்கு சமூக ஊடகங்களில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, இதே சல்மான் நத்வி, ,ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி தன்னை கலீஃபாவாக அறிவித்துக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நிறுவப்பட்டதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
செய்தி ஆதாரம்: https://www.newsbharati.com/Encyc/2022/8/3/Maulana-Salman-Nadwi-who-had-met-NSA-Ajit-Doval-opposes-to-ban-PFI-equates-it-with-RSS.html