தொலைக்காட்சிகளின் இரட்டை வேடம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூல் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். ஆனால், அப்போது நடந்துகொண்டிருந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு அங்குள்ள விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக சன் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகள் பரபரப்பாக ஒளிபரப்பின. ஆனால், அதே தொலைக்காட்சி சேனல்கள், தற்போது தி.மு.க ஆட்சியில் அதே பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ளதை வரவேற்று செய்தி வெளியிடுகின்றன. ‘பரந்தூரில் உள்ள விவசாயிகளும், அப்பகுதி மக்களும் இதனை வரவேற்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் படிக்கட்டாக விளங்கும். தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளை எட்டும் பயணத்தில் இவ்விமான நிலையம் ஒரு மைல்கல்’ என முதல்வர் தெரிவிக்கிறார்’ என சிறிதும் கூச்சமின்றி செய்தி வெளியிட்டுள்ளன.