கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.ஒய்.எம்) தொண்டர் பிரவீன் நெட்டாருவின் வீட்டிற்கு கட்சி வேறுபாடுகளைக் கடந்து கர்நாடகாவில் உள்ள உயர்மட்டத் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். நெட்டாருவின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தனது ஒரு மாத சம்பளத்துடன் கூடுதலாக ரூ. 5 லட்சத்தை அந்த குடும்பத்திற்கு வழங்கினார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேரளாவில் நட்த்தப்படும் கொலைகளை போன்றே இந்த கொலையும் நடந்துள்ளது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பை சேர்ந்தவர்கள் கேரளாவில் இதுபோன்ற பல கொலைகளை நடத்தியுள்ளனர். சிரியா மற்றும் பாகிஸ்தானில் இதுபோன்ற கொலைகளுக்கு பயிற்சி பெற்று பாரதத்தில் அவர்கள் இந்த செயல்களை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஒன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரில் ருத்ரேஷ் மற்றும் மங்களூருவில் ஷரத் மடிவாலா போன்ற ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் கொலையும் இதே பாணியில் நடத்தப்பட்டுள்ளது. அவர்களும் இதேபோன்று பின்னால் இருந்து தாக்கப்பட்டுள்ளனர்” என கூறினார். பிறகு, பி.எப்.ஐ அமைப்பை தடை செய்வது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “ அதுகுறித்து தேவையான தகவல்களைப் பெறுவதில் அரசு துறைகள் செயல்பட்டு வருகிறது. முன்னதாக ‘சிமி’ என்ற பயங்கரவாத அமைப்பைப் பற்றி பெரிய அளவிலான தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே சட்டப்பூர்வமாக அதை தடைசெய்ய முடிந்த்து. எனவே, நாம் பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றால், சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதைப் பற்றிய போதுமான தகவல்களை சேகரிக்க வேண்டும். ஹர்ஷாவின் கொலை வழக்கும் இப்படிதான்; என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் நிற்கும் வகையில் இருக்க வேண்டும். மத்திய அரசு இந்த திசையில் செயல்படுகிறது” என்று விளக்கினார்.