மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருதுகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் துறையானது, கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்தத் துறை கடந்த 14.07.2022 அன்று  விளம்பரம் வெளியிட்டு இருந்தது. www.awards.gov.in என்ற இணைய தளம் மூலம் கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 28, 2022 வரை விருதுக்கான பரிந்துரைகளை அளிக்கலாம். இது குறித்த விளம்பரம் www.disabilityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.