பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து ஒரு வேதனையான சாதனைக்கு சொந்தக்கார மாநிலமாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கிறது என தெரிவித்துள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் 34 மாவட்டங்களிலும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 11 மாவட்டங்களிலும் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுக்கும் மேலான சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, பட்டியலின பழங்குடியின மக்கள் முன்னேற்றம் என பொய் பேசும் திரவிட மாடல் ஆட்சியின் உண்மை முகம் இதுதான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனியாவது பட்டியலின பழங்குடியின மக்கள் இந்த திராவிட மாயையில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே உண்மையான சமூக நெதி ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.