பசுவதை தடுக்க போராட்டம்

ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 11ல் சிரியா காந்தி பஞ்சாயத்தில், ஒரு பசுவதை சம்பவம் நடந்துள்ளது. ஈத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் பசுவை அறுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர், இதை செய்த முஸ்லிம் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து, பசுவதை குற்றச்சாட்டின் பேரில் ஃபாரூக், அன்வர், அமீன் கான், சிக்கந்தர் கான் ஆகியோரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குற்றவாளிகள் மாட்டை அறுத்ததுஉறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பசுவதை சம்பவத்தை கண்டித்தும் ஜூலை 27ம் தேதி கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தையும் போராட்டக்காரர்களையும் கலைக்க முயன்றனர், அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை அங்கிருந்து காவலர்கள் கலைத்ததோடு, போராட்டக்காரர்கள் சிலரையும் கைது செய்தனர். அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.