மாணவியை ஏமாற்றிய பாதிரி

திருநெல்வேலி காவல்துறை ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்த மில்டன் கனகராஜ் என்பவர், கே.டி.சி. நகரில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் பயிற்சி பாதிரியாக உள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு மாணவியுடன் ஒன்றரை ஆண்டாக நெருங்கி பழகி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தனர். மாணவி இதுகுறித்து கேட்டபோது தரக்குறைவாக பேசியதோடு எரித்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார் பாதிரி மில்டன் கனகராஜ். இதையடுத்து மாணவி தந்த புகாரின் அடிப்படையில் காவல்துரையினர் வழக்கு பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.