இப்ராஹிம் ஈசாவுக்கு கொலை மிரட்டல்

இப்ராஹிம் ஈசா என்பவர் ஒரு முஸ்லிம் மற்றும் எகிப்திய தொலைக்காட்சித் தொகுப்பாளர்.  அவர் சலாபிசம், முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் அரசியல் இஸ்லாம் ஆகியவற்றை கடுமையான எதிர்ப்பதால் மக்களால் நன்கு அறியப்பட்டவர். முஸ்லிம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதுடன், இளைஞர்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் மூளை சலவை செய்கின்றனர் என்பதை கூறிவருபவர். மேலும், தாராளவாத பத்திரிகையாளர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகள் முஸ்லிம் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனர் என வெளிப்படையாக கூறியவர். அறிவியலும் படைப்பாற்றலும்தான் சாதனையின் வெளிப்பாடுகளே தவிர ஜிஹாத் அல்ல என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று வாதிடுபவர். இதனால், அவருக்கு அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பல முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தும் அவர்களின் அனுதாபிகளிடமிருந்தும் அவருக்கு எண்ணற்ற கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அவ்வகையில் தற்போது அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஊடகமான அஸ் சஹாப்பில் மதபோதகர் அபு அவ்வாப் அல்ஹசானி எழுதியுள்ள 16 பக்க கட்டுரையில், முஸ்லிம் ஜிஹாதி கருத்துக்களுக்கு நீண்டகாலமாக எதிர்ப்புத் தெரிவித்துவரும் ஈசாவை தூக்கிலிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.