பிரதமர் மோடி பிஹார் தலைநகர் பாட்னா சென்றபோது அவரை கொலை செய்ய சதித் தீட்டம் தீட்டிய முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் அக்தர் பர்வேஸ், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். இருவரிடமும் நடத்திய விசாரணையின் அடிப் படையில் அர்மான் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டார். காவல்துறை ஏ.எஸ்.பி மணீஷ் குமார் “கைது செய்யப்பட்ட இந்த பயங்கரவாதிகளுக்கும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கினர்” என்று தெரிவித்தார். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வரும் 2047ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள், வியூகங்கள் அடங்கிய பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பயங்கரவாத குழுவில் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாதிகள் மெது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது என்று ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.