போதையே தமிழகத்தின் பாதை

சென்னை: தமிழகத்தில் மாணவர்கள் இடையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாட்டு அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில், “தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதைக் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்கிறது அறிவாலய அரசு” என்று கூறியுள்ளார். அதனுடன் 3 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.