ஏழ்மையான பட்டியலின் வகுப்பைச் சேர்ந்த 14,48,790 பேருக்கு, தேசிய ஷெட்யூல்டு வகுப்பு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலமும் ஏழ்மையான, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 30,69,427 பேருக்கு இதுநாள் வரை தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமும் கடன் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஏ. நாராயணசாமி மக்களவியில் தெரிவித்தார். இதில் தமிழகத்திற்கு 64,465 பயனாளிகளுக்கு ரூ. 46.641.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ரூ.39,233.83 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 8,61,842 பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.1,048.88 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 2,173 பயனாளிகளுக்கு ரூ. 1,631.83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ரூ.1,320.20 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 17,317 பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 45.97 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என அவர் வெளியிட்டப் தேசிய அளவிலான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.