கிறிஸ்தவ பள்ளியில் பாலியல் சீண்டல்

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் கிறிஸ்தவ சி. எஸ். ஐ செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியில் படித்து வரும் பெண் மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் தொழில் கொடுத்து வருவதாக பல புகார்கள் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 14ம் தேதி அன்று காது கேளாதோர் சங்கத்தினர், சிவகங்கை ஆட்சி அலுவலகத்திலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மானாமதுரை தலைமை தகவல் அலுவலகம் முன்பாக அவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தினர் மானாமதுரை காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். மானாமதுரை காவல்துறையினர் தாசில்தார் ஆகியோர் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரகாம் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது துறை ரீதியாகவும், காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆல்பர்ட் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகே ஒரு ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்ட மற்றொரு ஆசிரியரையும் கைது செய்யவேண்டும், தவறு செய்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.