நூபுர் சர்மா புதிய மனு தாக்கல்

நுபுர் சர்மாவை ஆதரித்து பதிவிட்ட ஹிந்து தையல்காரர் கன்னையா லாலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு சம்பந்தமே இல்லாமல் நூபுர் சர்மா மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் பழி சுமத்தினார். நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர். இதற்கு தேசமெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர்களின் இந்த தேவையற்ற வாய்மொழி கருத்துக்களை, முன்னாள் நீதிபதிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து  நீதிபதி ஜே.பி. பர்திவாலா, தற்காத்துக்கொள்ளும் விதமாக, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டும் என கூறினார். இதையடுத்து தற்போது நூபுர் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளையடுத்து அவருக்கு புதிதாக மேலும் பல கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல்கள் விடப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இந்நிலையில், நுபுர் சர்மாவை கொல்வதற்காக பாகிஸ்தானில் இருந்து எல்லைத்தாண்டி வந்த பயங்கரவாதி நேற்று ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.