ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், ஒரு வருடத்திற்கு முன்பு அசலன் மற்றும் கலு கான் என்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிறுமியை கடத்திச் சென்றனர். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினர் அந்த சிறுமியை கண்டுபிடித்தனர். எனினும், சில நாட்களுக்குப் பிறகு, குற்றவாளிகள் மீண்டும் சிறுமியைக் கடத்திச் சென்றார். மீண்டும் காவல்துறையினர் அந்த சிறுமியை கண்டுபிடித்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். தற்போது அந்த சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தது. இதையடுத்து சல்மான், கலு கானுடன் அஸ்லான் என்ற மற்றொரு முஸ்லிம் நபரும் இணைந்து அந்த சிறுமியின் தாயை கடந்த ஜூலை 15ம் தேதி சந்தித்து மிரட்டியுள்ளனர். அதில் 18 வயது முடிந்த காரணத்தால் தாங்கள் அந்த பெண்ணை மீண்டும் ஒருமுறை கடத்திச் செல்லப்போவதாக மிரட்டியதுடன் அதனை எதிர்த்தால் உதய்பூரில் கன்னையா லாலை கொன்றதுபோல சிறுமியின் தாயையும் அவரது கணவரையும் கொல்வோம் என மிரட்டியுள்ளனர். முக்கியமாக, ஹிந்து பெண்ணை திருமணம் செய்து முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவதற்கு தங்கள் சமூகத்தினர் ரூ. 25 லட்சம் பரிசாக வழங்குவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அந்த தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், தனது டீன் ஏஜ் மகள் பள்ளி மாணவியாக இருந்தபோதே அசலன் மற்றும் கலு கான் பலமுறை என் மகளை துன்புறுத்தினர். தற்போது ஒரு ஹிந்து பெண்ணை திருமணம் செய்வதற்காக தங்கள் சமூகம் தங்களுக்கு அளிக்கும் 25 லட்சத்தை பெறுவதற்காக மட்டுமே அவளை கடத்தி திருமணம் செய்ய பார்க்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு என் மகளை கொலை செய்வதாகவோ அல்லது விவாகரத்து செய்வதாகவோ மிரட்டியுள்ளனர். இதிலிருந்து என் மகளை காப்பாற்ற வேண்டும் என கோரியுள்ளார்.