22வது பாரத் ரங் பெருவிழா

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், பாரதத்தின் 75வது சுதந்திர தின ஆண்டை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. டெல்லியின் தேசிய நாடகப் பள்ளி, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், “22வது பாரத் ரங் மஹோத்சவ் 2022” என்ற விழாவை நடத்துகிறது. இந்தப்பெருவிழா ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 14, 2022 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவை மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் துவக்கிவைத்து உரையாற்றுகையில், ‘சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தும், அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக மாற முடியவில்லை. உதாரணமாக, 1913ம் ஆண்டு மாங்கரில், அந்தப் பகுதியின் பழங்குடியினர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், ஆனால் அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்ட சம்பவம் அல்ல. நாடக ஆர்வலர்களும் தேசிய நாடகப் பள்ளியும் அந்தச் சம்பவங்களின் அடிப்படையில் நாடகங்களைத் தயாரிக்க முன்வர வேண்டும், இது போன்ற மாவீரர்களைப் பற்றி குடிமக்களுக்கு உணர்த்தவும், அவர்களின் வீரம் மற்றும் துணிச்சலான கதைகளை வெளிக்கொணரவும் நாடு முழுவதும் நாடகங்களை நடத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.