சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ், டைஷ் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்து பயங்கரவாதத்தில் ஈடுபட சட்டவிரோதமாக பாரதத்தில் இருந்து மித்லாஜ், அப்துல் ரசாக், ஹம்சா என்ற முஸ்லிம் இளைஞர்கள் பயணம் செய்ய முயற்சித்தனர். அவர்களை காவல்துறை கைது செய்தது. அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), அவர்கள் மீது எர்ணாகுளம் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் அவர்கள் மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.