14 மாநிலங்களில் உள்ள 41 புவியியல் பகுதிகளில் கெயில் இந்தியா மற்றும் அதன் ஒன்பது குழும நகர எரிவாயு விநியோக (சி.ஜி.டி) நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள 166 சி.என்.ஜி நிலையங்களை திறந்து வைத்து பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘400 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த சி.என்.ஜி நிலையங்கள் எரிவாயு அடிப்படையிலான உள்கட்டமைப்பு மற்றும் நாட்டில் தூய்மையான எரிபொருள் கிடைப்பதை மேலும் வலுப்படுத்தும். 2014ம் ஆண்டி நாட்டில் சுமார் 900 சி.என்.ஜி நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது சி.என்.ஜி நிலையங்களின் எண்ணிக்கை 4,500ஐத் தாண்டியுள்ளது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8,000 ஆக உயர்த்தப்படும். 2014ம் ஆண்டில் 24 லட்சமாக இருந்த குழாய் இயற்கை எரிவாயு (பி.என்.ஜி) இணைப்புகளின் எண்ணிக்கை இப்போது 95 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இத்தகைய அளவில் சி.என்.ஜியை வெளியிடுவது, சி.என்.ஜி வாகனங்களுக்கான சந்தையை ஊக்குவிக்கும். உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிவேக தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.