தவத்திரு ஊரான் அடிகளார் நேற்று சித்தியடைந்தார். குப்புசாமி பிள்ளையாக சமயபுரத்தில் பிறந்து வடலூர் ராமலிங்க சுவாமிகள் நிறுவிய சத்திய ஞான சபையில் 25 ஆண்டுகள் தலைவராகவும் துறவியர் சங்கத்தில் துணைத்தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து மிகசிறப்பாக தெய்வீக, சமுதாயத் தொண்டுகளை செய்துவந்தார். சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகச் சிறப்புப் படைத்தவர். அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் மிகப் பிரம்மாண்டமாக அமைய, அசோக் சிங்காலுடன் இணைந்து தமிழகத்தில் தனது நிலைப்பாட்டை உறுதிபட உரைத்தவர், இதற்காக பல பொதுகூட்டங்களில் வீரமுழக்கமிட்டவர். சைவ ஆதீனங்கள், துறவிகள், சாது சன்யாசிகளுடன் நெருக்கமாக பழகியவர். அடிகளாரது மறைவு தேசிய, தெய்வீக, சமூக சக்திகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.