பாரதமெங்கும் ஹிந்துக்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மீது முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி காலனிக்கு அருகில் காந்தராஜு என்ற பிஜ்ரங் தள ஆர்வலர் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இரவில் தனது பணிக்கு அவர் சென்றுகொண்டிருந்தபோது அவர் மீது முஸ்லிம் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் அவர் கையில் காயத்துடன் தப்பித்தார். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் 5 பேர் ஈடுபட்டதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுவரை, ஜுனைத் மற்றும் சோஹம் என்ர இரண்டு முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. ஹிஜாப் சர்ச்சைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பிப்ரவரி 20 அன்று கர்நாடகாவை சேர்ந்த பஜ்ரங்தள செயற்பாட்டாளர் ஹர்ஷா கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கந்தராஜு தீவிரமாக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.