மதத்தின் பெயரால் பள்ளிகளில் ஆபத்து

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதைக் காரணம் காட்டி, முஸ்லீம் சமூகத்தினர் அளித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அங்கு நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகள்  வார விடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமைக்கு மாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மத அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. ஏனெனில் இந்த பள்ளிகள் உருது  பள்ளிகள் அல்ல என்பதுடன் இந்த மாற்றத்தைச் செயல்படுத்த எந்தத் துறைசார்ந்த உத்தரவுகளையும் கல்வித்துறை பிறப்பிக்கவில்லை. ஜம்தாராவில் உள்ள 1,084 அரசுப் பள்ளிகளில் 15 மட்டுமே உருது நடுநிலைப் பள்ளிகள் என்று மாநிலக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் ஜும்மா தொழுகையில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் பள்ளியைத் தவிர்த்து விடுகிறார்கள். மேலும், அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர், ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்வதற்கும் வணக்கம் சொல்வதற்கும் பயன்படுத்தும் கைகளை கூப்பி வணக்கம் சொல்லும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ‘முஸ்லிம் சமூகத்தினர் வலியுறுத்தல் காரணமாக பள்ளி நிர்வாகங்கள் அரசின் சட்ட திட்டத்தை மீறி அவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது ஆபத்தான துவக்கம் இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும், பாரதத்தில் முஸ்லிம் சமூகத்தின் தங்கள் மக்கள்தொகை பெரும்பான்மை பெற்றவுடன் தங்கள் கொள்கையை எப்படி மாற்று மதத்தினர் மீது திணிப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு’ என சமூக ஊடகத்தில் மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.