ஓம்காரேஷ்வரில் ஆதிசங்கரர் சிலை

மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஷ்வரில் நர்மதை நதிக்கரையில் உள்ள மந்தாதா மலையில் 108 அடி உயர ஆதி சங்கராச்சாரியாரின் சிலை வெண்கலத்தால் அமைக்கப்படவுள்ளது. இது ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படும்.  காங்கிரீட் அடித்தளத்துடன் கல்லால் செய்யப்பட்ட தாமரை பீடத்தின் மீது இந்த வெண்கல சிலை அமைக்கப்படும். இந்த ஒற்றுமை சிலை திட்டம் முதல்வர் சிவராஜ் சௌஹானின் கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆதி சங்கராச்சாரியாரின் மாபெரும் சிலை தவிர, ஆதி சங்கராச்சாரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச அத்வைத வேதாந்த சன்ஸ்தான் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த சிலையை அமைப்பதற்கு மத்தியப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தை 15 மாதங்களில் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், 2,000 கோடி மதிப்பிலான ஆதி சங்கராச்சாரியார் சிலை கட்டுவதற்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், இதுகுறித்த வழக்கின் விசாரணை நிறைவடையும்வரை தடை விதித்துள்ளது.