வேலைவாய்ப்பு மற்றும் செய்முறைப் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் ‘திறன் இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜுலை 11, 2022 அன்று, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் மேளாவை நடத்டியது. இதுவரை, 1,88,410 விண்ணப்பதாரர்கள், தொழிற்பழகுனர் மேளாவில் பங்கேற்க விண்ணப்பித்து, அவர்களில் 67,035பேருக்கு பயிற்சிக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது. இந்த ஒரு நாள் மேளாவில் 36 துறைகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 500 வெவ்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்கேற்று தொழிற் பழகுனர்களை தேர்வு செய்தனர். மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம், 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மேளாவை நடத்தி, தொழிற்பழகுனர் பயிற்சி மூலம், விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்புக்கு உதவ உள்ளது. குறைந்தபட்சம் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றிருப்பதுடன், திறன் பயிற்சி சான்றிதழ், ஐ.டி.ஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்துள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மேளாவில் பங்கேற்கலாம். மேலும், வெல்டிங், மின்சார பணியாளர் வேலை, வீட்டு பராமரிப்பு, அழகுக்கலை, மெக்கானிக் போன்ற 500க்கும் மேற்பட்ட தொழிற் பிரிவுகளில், தங்களுக்குப் பிடித்தமான பிரிவை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம். இந்தப் பயிற்சியை முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, NCVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகார சான்றிதழைப் பெறலாம். தனிநபர்கள், https://dgt.gov.in/appmela2022/ அல்லது https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணைய தளங்களைப் பார்வையிடுவதன் மூலம் மேளாவிற்குப் பதிவு செய்யலாம் மற்றும் மேளாவின் அருகிலுள்ள இடத்தைக் கண்டறியலாம்.