பரூச் கட்டாய மதமாற்ற வழக்கு

பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை ஆசைகாட்டி, மிரட்டி முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய பரூச் கட்டாய மதமாற்ற வழக்கில், குஜராத்தில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து இந்த வழக்கில் கைதான குற்றவாளிகளின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் ஜாவித் முஃப்தி சலீம் ஹசன் யூசுப் இப்ராஹிம் படேல் மற்றும் ரமீஸ் ராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பணம், உணவு தானியங்கள், வியாபார உதவி, வேலை வாய்ப்பு, திருமணம், இரண்டாம் திருமணம், வீடு ஆகியவை தருவதாக ஆசைகாட்டி இந்த கும்பல் ஏழை பழங்குடியினரை மோசடி செய்து ஏமாற்றி மதமாற்றம் செய்துள்ளது. பருச் மாவட்டத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் இந்த மோசடியால் மதமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், இந்த பருச் வெகுஜன மதமாற்றத்திற்கும், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வெகுஜன மத மாற்ற மோசடிக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. குறைந்தது 1,000 பேரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு, உத்திரப் பிரதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் ஜூன் 2021ல் இரண்டு முஸ்லிம் மதகுருமார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.