மேதா பட்கர் நிதி முறைகேடு?

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதாகச் சொல்லி வசூலித்த நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது சம்பந்தமாக சமூக செயற்பாட்டாளர் என்ற முகமூடியுடன் திரியும் இடதுசாரி சிந்தனையாளர் மேதா பட்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு வழங்குவதாக கூறி 13 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2007 முதல் 2022 வரை பழங்குடியின ஏழை குழந்தைகளின் கல்விக்காக என இவர் சேகரித்த நன்கொடைகளுக்கு கணக்கை முறையாக வழங்காமல் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் கல்விக்கான நன்கொடை என்ற பெயரில் அரசுக்கு எதிரான உணர்வைத் தூண்டிவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மேதா பட்கருடன் இணைந்து பர்வீன் ரோமு ஜஹாங்கீர், விஜயா சௌஹான் உள்ளிட்ட 11 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் பர்வானியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நர்மதையை காப்போம் என்ற போராட்டத்திலும் மேதா பட்கரின் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2004ல் நிறுவப்பட்ட ஒரு வருடத்திற்குள் சுமார் 1.2 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதிலும் கணக்கு சமர்ப்பிக்காமல் முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.