ooபக்ரீத்தில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுமா?

நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக சமீபத்தில் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பசு, ஒட்டகங்களை காப்பாற்ற உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு செயல்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தரவு மீறல்: தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்கள் பசுவை கோமாதாவாக வணங்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதும், அந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் இங்குதான். ஆனால், இதே தமிழகத்தில்தான், பக்ரீத் பண்டிகைகயிபோது அரசின் அனுமதியின்றி, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதியற்ற திறந்தவெளி இடங்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் மக்களின் கண் முன்னே பசு, கன்று, ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வெட்டிக் கொல்வதும் நடைபெறுகிறது. அனுமதியற்ற மாட்டு வதைக் கடைகளில் பெரும்பாலானவை சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் உறுப்பினர்களால் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தனி கதை: திருவள்ளுவர், வள்ளலார், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாம் வாழ்ந்து, அன்பு, அஹிம்சை, புலால் மறுத்தல் போன்றவற்றை போதித்த ஆன்மீக பூமியான தமிழகத்தில் இன்று பிரியாணிக் கடைகளின் திடீர் பெருக்கம், சுகாதாரமின்மை, ஹலால், உமிழ்நீர் துப்புதல், ஆரோக்கியத்திற்கு ஆபத்தான மசாலாக்கள், கலரிங் ஏஜெண்டுகள் மற்றும் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலந்து கொடுப்பது போன்றவை நடப்பதாக பல புகார்கள் ஏற்கனவே இருக்கின்றன, அதன் மீது சரிவர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அதை பற்றிய விவாதம் இதில் தேவையில்லை.

நீதிமன்ற உத்தரவு: பக்ரீத் பண்டிகை அல்லது பிற மதப் பண்டிகைகளின் போது, ​​பொது இடங்களில் விலங்குகள் வெட்டப்படாமல், உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகள் வெட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சில மாநிலங்களில் தடை செய்யப்பட்ட பிரிவின் கீழ் வரும் பசு மற்றும் ஒட்டகங்களை அல்ல, மருத்துவர்களின் உரிய சான்றிதழின் கீழ் அனுமதிக்கப்பட்ட வகை விலங்குகளை மட்டுமே வெட்ட அனுமதிக்க வேண்டும். 2001ம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு விதிகள் மற்றும் விலங்குகளை கொண்டு செல்வது தொடர்பான விதிகளை கடுமையாகவும், நேரடியாகவும் செயல்படுத்துவதை காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

காந்தியின் வார்த்தை: அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்ற சமூகத் தலைவர்கள் விலங்குகளுடன் நட்புறவு, அகிம்சை ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள் “ஒரு தேசத்தின் மகத்துவத்தையும் அதன் தார்மீக முன்னேற்றத்தையும் அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து தீர்மானிக்க முடியும்” என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளையும் தங்கள் இடைக்கால உத்தரவில் மேற்கோள் காட்டினர்.

மிரட்டல்: திருச்சியில் கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்காக சட்டவிரோதமாக கொல்ல வைத்திருந்த 80 மாடுகளை அதிகாரிகள் ஹிந்து அமைப்பினர் காப்பாற்றினர். இந்த நடவடிக்கையின்போது காவலர்களை அந்த முஸ்லிம் கும்பல் கத்தியை காட்டி மிரட்டியது. திருச்சி மாநகரில் மட்டும் சுமார் 13  இடங்களில் சட்டவிரோத பசு வதை மையங்கள் முறையான அனுமதி பெறாமலும், பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றாமலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளன.

சுகாதார சீர்கேடு: சட்டவிரோதமாக அனுமதியில்லாத இடங்களில் விலங்குகளை கொல்வது மட்டுமில்லாமல், அவற்றின் எலும்புகள், முடிகள், கழிவுகளை சாலைகள் அல்லது திறந்தவெளிகளில் அப்படியே வீசிவிட்டு, உள்ளூர் மக்களுக்கு சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் இவர்கள் உருவாக்குகின்றனர். இந்த சட்ட விரோத செயல்களை கண்டுகொள்ளாமல் அரசு அதிகாரிகளும் கண்களை மூடிக்கொள்கின்றனர். சென்னை உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த நிலைமை இன்னும் மாறவில்லை.

அரசு செயல்படுமா? இப்படி நீதிமன்ற, அரசு உத்தரவுகளை மீறி செயல்படுவோர் மீது அரசு அதிகாரிகள் அச்சமின்றி, பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுப்பார்களா? உயர்நீதிமன்ற உத்தரவை திராவிட மாடல் தி.மு.க அரசு செயல்படுத்துமா? அல்லது வழக்கம்போல தனது சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் கொள்கையை கடைபிடிக்குமா என்பதே விலங்கு நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.