நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்ததற்காக மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் வசித்துவந்த உமேஷ் கோல்ஹேவை முஸ்லிம் மதவெறியர்கள் கொடூரமாக கொலை செய்தனர். அதன் பின்னர், நுபுர் சர்மா ஆதரவு இடுகையைப் பகிர்வதற்காக அமராவதியில் மேலும் சிலருக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும், மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு மிரட்டல் விடுத்த மேலும் நான்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளை அமராவதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சிட்டி கோட்வாலி பி.எஸ் காவல் ஆய்வாளர் நிலிமா அராஜ் தெரிவித்தார். மேலும், நூபுர் ஷர்மாவின் பதிவுகள் தொடர்பாக யாராவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தினால் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அமராவதி காவல் ஆணையர் ஆர்த்தி சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.