அவமதித்த முஸ்லிம் மதகுரு

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டோட்டியில் வசிப்பவர் வசீம் அல் ஹிகாமி என்ற முஸ்லிம் மதகுரு.  அவர் டிசம்பர் 2021ல் தனது யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பதிவேற்றினார், அதில் அவர் ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இழிவான கருத்துக்களைக் கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.க தலைவர் அனூப் ஆண்டனி (முன்னாள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தேசிய செயலாளர்) அந்த முஸ்லிம் மதபோதகர் கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக காவல்துறையில் புகார் பதிவு செய்தார். இதுகுறித்து பலரும் புகார் அளித்தனர். எனினும் வசீம் அல் ஹிகாமி மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாக புகார் அளித்ததோடு, எர்ணாகுளம் சைபர் செல்லிலும் புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கும் எதிர்பார்த்த பலனில்லை. இதையடுத்து எர்ணாகுளம் நீதிமன்றத்தை அனுகினார் அனூப் ஆண்டனி. நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்தே மாநில காவல்துறை தற்போது முஸ்லிம் மதகுரு மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதே போன்ற காரணங்களுக்காக கேரள காவல்துறை கிறிஸ்தவரும் முன்னாள் அமைச்சருமான பி.சி ஜார்ஜை மிகவிரைவாக கைது செய்த காவல்துறை வசீம் அல் ஹிகாமி வழக்கில் எதுவும் செய்யவில்லை. கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்திய வசீம் அல் ஹிகாமி மீது வழக்கு தொடருவோம். என அனூப் ஆண்டனி தெரிவித்துள்ளார்.