உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் தாலிப் ஹுசைன் என்ற முஸ்லிம் இறைச்சி கடைக்காரர், தனது கடை இறைச்சிகளை ஹிந்து தெய்வங்களின் உருவங்களைக் கொண்ட காகிதத்தில் சுற்றி விற்றார். இதனால் அப்பகுதி ஹிந்துக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஹுசைனின் நடவடிக்கையால் தங்களின் மத உணர்வுகள் புண்பட்டதாக உள்ளூர்வாசிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தாலிப் ஹுசைனை விசாரிக்க காவலர்கள் சென்றனர். அப்போது அவர்களை கொலை செய்யும் நோக்கத்தில் தாலிப் ஹுசைன் கூர்மையான கத்தியால் தாக்கினார். இருப்பினும் காவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.