நான்காவது தொழில் புரட்சியில் பாரதம்

ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் பல்வேறு திட்டங்களை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நான்காவது தொழில்புரட்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கும். பாரதம் வெறும் நுகர்வு நாடாக மட்டும் இருக்க முடியாது. தன்னிறைவை அடைவதற்கும், உலகளாவிய நலனை மேம்படுத்துவதற்கும் நாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, சொந்த மாதிரிகளை நிறுவ வேண்டும். தற்சார்பு பாரதம் என்ற பிரதமர் மோடியின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020 என்பது புதிய வளர்ந்து வரும் உலக ஒழுங்கமைப்பில் பாரதத்தை முதலிடத்தில் வைப்பதற்கான ஒரு வரைபடம். இது கல்வி அமைப்பில் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பதை வலியுறுத்துகிறது. திறன் வளர்ப்பு என்பது வாழ்நாள் செயல்முறை’ என்று தெரிவித்தார்.