ஆப்கானிஸ்தானுக்கு உதவும் பாரதம்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாரதம் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை வழங்குவதாக உறுதியளித்துள்ளது நமது நாடு. இது பகுதி பகுதியாக அனுப்பி வைக்கப்படுககிறது. அவ்வகையில் தற்போது மேலும் 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது பாரதம். இதோடு சேர்த்து இதுவரை மொத்தம் 36,000 டன் கோதுமையை இலவசமாக பாரத அளித்துள்ளது. அட்டாரி வாகா எல்லை வழியாக லாரிகளில் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.