காற்றில் பறந்த வாக்குறுதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வறுமைக் கோட்டிற்கு கீழே குடும்பங்களுக்கு, முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நேரடிப் பணப் பரிமாற்றமாக மூன்றாண்டுகளுக்கு மாதம் ரூ. 5,000 வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். மேலும், சமூக நலன் அல்லது நலநிதி அல்லது இதர ஓய்வூதியம் பெறுவது உதவி பெற தகுதியின்மையாக கருதப்படாது, விண்ணப்பத்தில் தீர்வு காண யாரையும் அலுவலகத்திற்கு அழைக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அக்டோபர் 13, 2021 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 1 முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வந்த 20,000 விண்ணப்பங்களில் 6,000 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் இதுவரை அவர்கள் யாருக்கும் கேரள அரசு அறிவித்த்தை போல பணம் கொடுக்கவில்லை. மேலும், பல விண்ணப்பங்களையும் அரசு நிராகரித்துள்ளது. சிலர் தேவையான ஆவணங்களை அளித்த பிறகும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ‘கேரள கௌமுதி’ பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. சி.பி.ஐ.எம் தலைமையிலான கேரள அரசின் மற்றொரு போலி வாக்குறுதி இது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.