ஜிஹாத் நிறுத்தப்பட வேண்டும்

ராஜஸ்தானின் உதய்பூரில் முஸ்லிம் ஜிஹாதிகளால் கன்னையா லால் என்ற அப்பாவி நபர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கும், நாட்டில் வளர்ந்து வரும் தீவிர ஜிஹாதி பிடிவாதத்திற்கும் எதிராக பஜ்ரங்தள் அமைப்பினர் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் உரையாற்றிய வி.ஹெச்.பியின் மத்திய செயல் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், “முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் நம்பும் ஜிகாத்தின் இடைக்கால கருத்துக்கள்; வெறுப்பை பரப்பி, பாரத சமுதாயத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றன. உலக அமைதி மற்றும் மனித நேயத்திற்கு விடப்படும் கடுமையான சவால்கள் இவை. உலகம் முழுவதிலும் உள்ள நாகரீக சமூகங்கள் ஒன்றிணைந்து இதனை என்ன விலை கொடுத்தாவது எதிர்க்க வேண்டும். இவ்வழக்கில் காவல்துறை விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும், விரைவு நீதிமன்றம் விசாரித்து இந்த கொலையாளிகளுக்கு 6 மாதங்களுக்குள் சாகும்வரை தூக்கிலிடும் தண்டனையை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும். சரியான சிந்தனையுள்ள முஸ்லிம்கள் இந்தப் பிரச்சனைகளை தங்கள் சமுகத்தில் எழுப்ப வேண்டும். நவீன மனித விழுமியங்களை ஏற்று சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மதரசாக்கள் மற்றும் பிற முஸ்லிம் நிறுவனங்கள் பயங்கரவாதத்தின் நாற்றங்கால்களாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.