பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த திரைப்படம் தயாரிப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் தலைப்பு ‘மெயின் ரஹூன் யா நா ரஹூன் யே தேஷ் ரெஹ்னா சாஹியே அடல்’. உல்லேக் என்.பி எழுதிய தி அன்டோல்ட் வாஜ்பாய்: பொலிட்டிசியன் அண்ட் பாரடாக்ஸ் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. சந்தீப் சிங் இயக்கி தயாரிப்பாளர் வினோத் பானுஷாலியுடன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வாஜ்பாயியின் பிறந்த நாளான டிசம்பர் 25 அன்று வெளியாகவுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் அவரது 99வது பிறந்த நாளாகும்.